உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு

‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு

அனிமல் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் நடிக்கிறார். இது பிரபாஸின் 25வது படமாக உருவாகிறது. நாயகியாக பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க, முதன்மை வேடத்தில் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், பழம்பெரும் நடிகை காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.

போலீஸ் கதை பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ஸ்பிரிட் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதில் உடலில் காயங்களுடன் பிரபாஸ் இருக்க அவருக்கு சிகரெட் பற்ற வைக்க திரிப்தி டிம்ரி உதவுவது போன்று இந்த போஸ்டர் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !