உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். 'வித் லவ்' என தலைப்பு வைத்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர். பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனங்களின் மூலம் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவாகி வரும் இப்படம் பிப்., 6ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !