உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு

ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‛பகவந்த் கேசரி' படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு அடுத்தவாரம் ஜன., 9ல் படம் திரைக்கு வருகிறது.

முன்னதாக கடந்தவாரம் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாய் நடந்து முடிந்தது. அடுத்தப்படியாக படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் டிரைலர் நாளை(ஜன., 3) மாலை 6:45 மணியளவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் டிரைலர் வெளியாகிறது.

பொதுவாக விஜய் படம் சம்பந்தப்பட்ட பாடல்கள், டிரைலர்கள் வெளியானால் டிரண்ட் அவதுடன் அதிக பார்வைகள் என ஏதாவது ஒரு புதிய சாதனை படைக்கும். அதுவும் இது விஜயின் கடைசி படம் என சொல்லியிருப்பதால் நிச்சயம் நாளை வலைதளங்கள் முழுக்க ‛ஜனநாயகன்' படத்தின் டிரைலர் தான் ஒலி(ளி)க்கும். இந்த படத்தில் வரும் தளபதி கச்சேரி பாடல் போன்று நாளை நிச்சயம் வலைதளங்கள் ‛பிளாஸ்ட்..., பிளாஸ்ட்' தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !