உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு

பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பராசக்தி'. 1960 காலக்கட்டத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணி கதையில் இப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் வெளியீடாக வரும் ஜன., 10ல் படம் ரிலீஸாகிறது.

இந்த படத்தின் கதை நான் எழுதிய ‛செம்மொழி' என்ற கதையை திருடி எடுக்கப்பட்டு இருப்பதாகவும், பராசக்தி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த கதை திருட்டு புகார் குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் போதிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. இதனால் பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இரு பட கதைகளை முழுமையாக ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !