உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர்

பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர்

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படம் வரும் சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து ஸ்பிரிட், பவுசி ஆகிய படங்களும் ஏற்கனவே வெளியான சலார், கல்கி படத்தின் இரண்டாம் பாகங்களும் அடுத்தடுத்து தயாராக இருக்கின்றன. இதில் பவுசி படத்தை சீதாராமம் புகழ் இயக்குனர் அனுராகவ புடி இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி என்பவர் நடிக்கிறார். மேலும் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானுச்சந்தர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சஜ்ஜத் டெலப்ரூஸ் என்கிற ஈரானைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருக்கிறார். ஈரானை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் கூட இவர் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் தான் நடித்து வருகிறார். குறிப்பாக 2017ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான டைகர் ஜிந்தா ஹை படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் சஜ்ஜத் டெலப்ரூஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !