உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு

ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு

கடந்த 2024ல் தெலுங்கில் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் புராண திரில்லர் படமாக வெளியான ஹனுமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இதை பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ஜெய் ஹனுமன் என்கிற படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். அதேசமயம் முதல் பாகத்தில் நடித்த தேஜா சஜ்ஜாவும் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் சமீப நாட்களாக அவர் இந்த இரண்டாம் பாகத்தில் இருந்து தேஜா விலகிவிட்டார் என்றும் ஹனுமன் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மிராய் உள்ளிட்ட படங்களில் வெற்றியாலும் இந்த இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்கிற வருத்தத்திலும் அவர் வெளியேறிவிட்டார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இதுபற்றி தேஜா சஜ்ஜா கூறும்போது, “ஜெய் ஹனுமன் படத்தில் இருந்து நான் வெளியேறி விட்டதாக கூறப்படும் தகவல் பொய்யான செய்தி. அந்தப் படத்துடன் இப்போதும் நான் இணைந்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !