உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா?

விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா?

இன்னும் ஒரே வாரம்தான், அடுத்தவார சனிக்கிழமை விஜய் நடித்த ஜனநாயகன் பட ரிசல்ட் தெரிந்துவிடும். விஜயின் கடைசி படம் என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையில் ஜனநாயகன் படம் குறித்து எந்த விழாவும் நடக்கவில்லை. விஜயும் எதுவும் பேசவில்லை. மலேசியாவில் நடந்த ஜனநாயகன் விழாவில் மட்டுமே கலந்து கொண்டார்.

தமிழக மக்களுக்காக, தமிழ் மீடியாவுக்காக அடுத்த வாரம் சென்னையில் ஜனநாயகன் விழா அல்லது பிரஸ்மீட் நடக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால், தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்களுக்கு விஜய் பார்ட்டி கொடுத்து பிரியாவிடை கொடுப்பாரா அல்லது விஜய்க்காக அவருடைய நண்பர்கள் பிரிவு உபசார விழா நடத்துவார்களா என்பதும் கேள்வி குறியாக உள்ளது.

அவர் எது பேசினாலும், எதை செய்தாலும் அரசியல் ஆகிவிடுகிறது. அது ஜனநாயகன் பிஸினசை பாதிக்கலாம். அதனால், படம் ரிலீஸ் ஆகும்வரை அமைதியாக இருப்போம் என அவர் முடிவெடுத்து இருக்கிறார் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். விஜயும் ஜனநாயகன் பிரமோஷன் விஷயத்தில் குழப்பமான மனநிலையில் இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !