உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி

தெலுங்கில் உப்பன்னா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் கிர்த்தி ஷெட்டி. வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்த இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டியின் அப்பாவாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதன்பிறகு தெலுங்கில் அவர் நடித்த எந்த படங்களும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக தமிழ் சினிமாவுக்கு வந்தார் .

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். பின்னர் சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறியபோது கிர்த்தி ஷெட்டியும் வெளியேறினார். அதையடுத்து, வா வாத்தியார், ஜீனி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் கிர்த்தி. ஹிந்தியில் மிலாப் மிலன் ஜவேரி என்பவர் இயக்கும் படத்தில் டைகர் ஷெராப்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையே இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பிடித்த ஹீரோவுடன் உடன் நடித்துவிடணும். அப்போதுதான் பயம், பதற்றம் குறையும். இதுவே என் ஆசை. அதிர்ஷ்டம் எல்லாநேரமும் கை கொடுக்காது. அதற்காக அதன் மீது பழிபோடாமல் இன்னும் என்ன செய்யலாம் என யோசிக்கணும், அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !