உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு

பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலேயே திரைக்கதை மன்னன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரராக பாராட்டப்படுபவர் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் சீடரான இவர் 16 வயதினிலே படத்திலிருந்து அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் அவராலேயே கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டு அதன்பிறகு தன்னுடைய தனித்துவமான கதை உருவாக்கம் டைரக்சனில் மிகப்பெரிய திரை ஆளுமையாக உருவெடுத்தார்.

இவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக வரும் ஜனவரி 7ம் தேதி அவரின் பிறந்தநாளில் சென்னை, கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க வரும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுத்தார் பாக்யராஜ். உடன் அவரது மனைவி, நடிகை பூர்ணிமாவும் சென்றார்.

இந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த ரஜினி உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !