‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை
ADDED : 3 days ago
தமிழில், ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்த நிதி அகர்வால், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தில் பவன் கல்யாணுடன் நடித்திருந்தார். தற்போது பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மாளவிகா மோகனன், ரித்திகா குமார் ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிதி அகர்வால், சங்கராந்திக்கு வெளிவரும் இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி, இதன்பிறகு தெலுங்கில் மூன்று படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறேன். தி ராஜா சாப் படம் திரைக்கு வந்த பிறகு அந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.