‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.?
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன., 9ம் தேதி வெளியாகிறது. இது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.
இந்நிலையில் படம் வெளியாக 5 நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்கவில்லை. இதனால் புக்கிங்கிலும் மந்த நிலை நிலவுகிறது. இதுதொடர்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் வெளியிட்ட பதிவில், ‛‛ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து ‛UA' சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.