உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு

‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்' படம் இந்த பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் ரிலீஸாகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

2:52 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுக்க முழுக்க ஆக் ஷன் கலந்த கமர்சியல் மற்றும் அரசியல் பேசும் படமாக அமைந்துள்ளது. தளபதி வெற்றி கொண்டான் என்ற போலீஸ் அதிகாரியாகவும், பாசமான அப்பாவாகவும் நடித்துள்ளார் விஜய். இவரது மகளாக மமிதா பைஜு நடித்துள்ளார். வில்லனான பாபி தியோல் கும்பலால் மமிதாவிற்கு ஒரு பிரச்னை வர அதில் களமிறங்கி எதிரிகளை துவம்சம் செய்கிறார் விஜய் என்பது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. அதோடு நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல், அரசியல்வாதிகளின் ஊழல் என கலந்துகட்டி இந்த படத்தை வினோத் கொடுத்துள்ளார் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது.

டிரைலரில் விஜய், மகளாக மமிதா, வில்லனாக பாபி தியோல், அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பிரதானமாக வருகின்றனர். பிரியாமணி, பூஜா ஹெக்டோ, நாசர், நரேன் உள்ளிட்டோரும் ஒரு காட்சியில் வந்து போகின்றனர். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‛பகவந்த் கேசரி' படத்தின் ரீ-மேக் என கூறப்படும் நிலையில் அந்த படத்தை தொடர்புபடுத்தி பல விஷயங்கள் இந்த படத்திலும் உள்ளன.

‛‛தளபதிய தொட்டுறாத ஸ்லைஸ் போட்டுருவாப்ல..., நான் சாதா மேன் தான் பேபி ஆனா செய்ற சம்பவம் சூப்பரா இருக்குனு சொல்லுவாங்க... உன்ன காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன் என சொல்றவன் எவனா இருந்தாலும் சரி திரும்பி போற ஐடியாவே இல்ல, ஐயம் கம்மிங் (நான் வரேன்) ..., மக்களுக்கு நல்லது பண்ண அரசியலுக்கு வாங்கடான்னா கொள்ளையடிக்கவும், கொல பண்ணவுமாட அரசியலுக்கு வர்றீங்க...'' என விஜய் பேசும் மாஸான பஞ்ச் டயலாக்கும் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தபின்னர் அவர் முன் வைக்கும் அரசியல் விமர்சனங்கள், அவர் எதிர்கொள்ளும் அரசியல் தொடர்பான பிரச்னைகள் இந்த படத்தில் ஆங்காங்ககே இடம்பெறும் என தெரிகிறது. அதற்கு அச்சாரமாக டிரைலரில் இடம்பெற்றள்ள மேற்சொன்ன வசனங்களே சாட்சி.

எது எப்படியோ விஜயின் கடைசிப்படம் நிச்சயம் மாஸ் என்டர்டெயினாக இருக்க போகிறது. டிரைலர் வெளியான அரை மணிநேரத்தில் தமிழில் மட்டும் 20 லட்சம் பார்வைகளை கடந்தது. தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் வெளியாவதால் அந்த மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-01-06 10:15:30

கரூருக்குத்தானே