யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பசில் ஜோசப் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 1960ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை குறித்து சர்ச்சைகள் எழுந்து நீதிமன்றத்திற்கு சென்றது. என்றாலும் படத்தின் ரிலீஸ்க்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதனால் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி இப்படம் திரைக்கு வரப்போவது உறுதியாகி உள்ளது. அதோடு சென்சார் போர்டிலும் பிரச்சனை ஏற்பட்டு இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது. இந்த நேரத்தில் பராசக்தி படம் யு.கேவில் முன்பதிவில் 4000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக அந்த படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள்.