முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா
தமிழ்த்திரை உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் டிசம்பர் 3ம் தேதி காலமானார். அவர் பட திறப்பு விழா நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் பள்ளி வளாகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், ரஜினி கமல் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சற்றே இடைவெளிக்கு பின் ரஜினி, கமல் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவாகும்.
கடந்த ஆண்டு சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடந்த இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர், ரஜினி, கமல் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் மூவரும் கலந்து கொள்கிறார்கள். ஏவிஎம் சரவணன் மறைந்தபோது விஜய் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை. அவர்கள் வெளியூரில் இருந்ததாக கூறப்படுகிறது.
பட திறப்பு விழாவிலாவது அவர்கள் கலந்து கொள்வார்களா? அல்லது வழக்கம்போல் புறக்கணிப்பார்களா என்பது நாளை மாலை தெரிந்து விடும். ஏவிஎம் சரவணன் பட படத்திறப்பு விழாவில் அவர் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பை தமிழக அரசு சார்பில் முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.