மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ்
சினிமா ஆரம்பத்தில் மவுன படமாக இருந்தது. பின்னர் விஞ்ஞான வளர்ச்சியில் பேசும் படமாகின. ஆனால் சோதனை முயற்சியாக பேசும்படம் என்ற மவுன படத்தில் நடித்தார் கமல்ஹாசன். சீங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய அந்த படம்1987 ல் ரிலீஸ் ஆனது. பின்னர் அந்த வகை படங்கள் வரவில்லை. இப்போது வசனங்கள் ஏதுமின்றி, மவுனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக காந்தி டாக்ஸ் உருவாகி உள்ளது.
இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
படம் குறித்து இயக்குனர் பேசுகையில் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் “காந்தி டாக்ஸ்”, ஒரு வார்த்தையும் பேசாமல், உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும். ரசிகர்கள் இதை ரசிப்பார்கள் என் கிறார்கள்.