உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்!

அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்!


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தை அடுத்து வெளிநாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் அஜித் குமார். இதில் அஜித் ரேஸிங் அணி சில விருதுகளையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் மலேசியாவில் அஜித் கார் ரேஸில் பங்கேற்று வந்தபோது இயக்குனர் ஏ.எல்.விஜய் அங்கு சென்று அவர் கார் ரேஸில் பங்கேற்பதை ஆவணப் படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதேபோன்று சிறுத்தை சிவாவும் அஜித்தை வைத்து ஒரு விளம்பர படம் எடுத்தார். மேலும், ஏ.எல்.விஜய் எடுத்துள்ள அஜித் ரேஸிங் ஆவணப்படம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் ‛கிரீடம்' படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், ‛பில்லா, ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், ‛வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம்' படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்து உள்ளார்கள். அந்த புகைப்படத்தை அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !