வாசகர்கள் கருத்துகள் (3)
நீ உயிரோடுதான் இருக்கியா வங்கதேச ஹிந்துகளுக்கு எதுக்குடா நீ குரல் கொடுக்கவில்லை
ivanae .. sithirai kullan
என்னப்பா சித்திர குள்ளன்
ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர்'. அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் 1200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது. இந்த நிலையில், இந்தத் ‛துரந்தர்' படத்தை பார்த்த நடிகர் சூர்யா அதுகுறித்து ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்த துரந்தர் படத்தை தான் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதுவதாக அப்பட இயக்குனர் ஆதித்யா தாரை பாராட்டியுள்ளார்.
இந்த படத்தின் கதையும் காட்சி அமைப்பும் தன்னை வியக்க வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் தனது நண்பரான நடிகர் மாதவனையும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் பாராட்டுயுள்ளார். சூர்யாவின் இந்த பாராட்டுக்கு, சூர்யாவின் வார்த்தைகள் விலைமதிப்பற்றது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் அன்புக்கு நன்றி. அவர்கள் கருணை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்று பதிவிட்டுள்ளார் மாதவன்.
நீ உயிரோடுதான் இருக்கியா வங்கதேச ஹிந்துகளுக்கு எதுக்குடா நீ குரல் கொடுக்கவில்லை
ivanae .. sithirai kullan
என்னப்பா சித்திர குள்ளன்