வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன்
80களில் முன்னணியில் இருந்த நாயகிகளில் ஒருவர் சுதா சந்திரன். மற்ற நடிகைகளுக்கும் இவருக்குமான வித்தியாசம். சுதா சந்திரன் விபத்தில் ஒரு காலை இழந்தவர். ஒரு காலிலேயே நடனம் கற்று, முதல் படமாக தனது 'பயோபிக்' படத்தில் நடித்தவர். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் அவர் தன்னுடைய வீட்டில் 'மாதா கி சவுகி' என்ற சிறப்பு பூஜையை நடத்தினார். சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து, தலையில் பட்டை கட்டி சுதா சந்திரன் பூஜையில் பங்கேற்றார். அப்போது பக்தி பாடல்கள் ஒலித்தது. அதைக்கேட்டு பரவசம் அடைந்த சுதா சந்திரன் அருள் வந்து ஆடத் தொடங்கினார்.
ஒருகட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கத்தியபடியே அவர், அருகில் இருந்த உறவினர் ஒருவரின் கையை ஆக்ரோஷத்துடன் கடிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதா சுந்திரனின் கணவர் ரவி டாங், சக நடிகை ஜஸ்வீர் கவுர் சுதா சந்திரனை தாங்கிப்பிடித்து ஆசுவாசப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி உள்ளது.