உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா

அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா


கிச்சா சுதீப் நடித்த 'மார்க்' படத்தின் மூலம் தமிழக்கு வந்திருக்கிறார் தீப்ஷிகா சந்திரன். மார்க் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் தீப்ஷிகாவின் நடிப்பும், அழகும் பேசப்படுகிறது.

'மார்க்' படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து என் நடிப்பு திறமைக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் தெளிவும் வழிகாட்டுதலும் இந்த கதாபாத்திரத்தை திறமையுடன் கையாள உதவியது.

கிச்சா சுதீப்பின் ஊக்குவிப்பும், அக்கறையும் சகநடிகாராக எனக்கு தேவையான தன்னம்பிக்கை கொடுத்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் ஆதரவு கொடுத்தனர். அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அப்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !