தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி
ADDED : 8 days ago
தெலுங்கில் தயாராகி வரும் படம் 'ஜெட்லி'. 'மாத்து வடலாரா' படத்தின் 2 பாகங்களை இயக்கிய ரித்தேஷ் ராணா இயக்குகிறார். தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகர் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் கதாநாயகியாக 2024ம் ஆண்டில் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டம் வென்ற அழகியான ரெஹா சிங்கா அறிமுகமாகிறார். 'வெண்ணிலா கபடி குழு' கிஷோர், அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கிறார்.
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், லாரா தத்தா, சுமன் ராவ் வரிசையில் இப்போது அழகியான ரெஹா சிங்காவும் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.