அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி
ADDED : 7 days ago
தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் 'உலகம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசியதாவது:
அடுத்த தலைமுறைகளுக்கு வேறு எதையும் கொடுப்பதைவிட கல்வியை கொடுப்பது மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதினால் அந்த தலைமுறை, அவர் குடும்பம், அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து போகிறார்கள்.
ஒருவருக்கு அவரின் வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கக்கூடிய அறிவு மூலமாக தான் முன்னேறி போகிறார்.
அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறிந்து முன்னால் நகர்த்தி போவதில் பெரும் பங்கை முதல்-அமைச்சர் வகிக்கிறார். அதற்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த திட்டத்தில் பலன் அடையும் அனைவருக்கும் வாழ்த்துகள். என்றார்.