உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்'

'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்'

ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'.

இப்படம் 31 நாட்களில் உலக அளவில் 1240 கோடியை மொத்த வசூலாகப் பெற்றது என தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவில் மொத்த வசூலாக 968 கோடியும், அதில் நிகர வசூலாக 825.70 கோடியையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிக நிகர வசூலைப் பெற்ற படங்களில் 830 கோடியுடன் தெலுங்குப் படமான 'புஷ்பா 2' படம் முதலிடத்தில் உள்ளது. அந்த வசூலை முறியடிக்க 'துரந்தர்' படத்திற்கு இன்னும் 4.30 கோடிகள்தான் தேவை. அதை விரைவில் பெற்று 'புஷ்பா 2' சாதனையை முறியடிக்க உள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படங்கள் நம்பர் 1 இடத்தை பெறப் போகிறது.

உலக அளவில் அதிக வசூலைக் குவித்துள்ள ஹிந்திப் படங்களில் தற்போது 'துரந்தர்', இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 1960 கோடியுடன் 'டங்கல்' படம் உள்ளது.

மற்ற மொழிப் படங்களுடன் சேர்ந்த பட்டியலில் தெலுங்குப் படமான 'பாகுபலி 2' சுமார் 1800 கோடிகளுடன் 2ம் இடத்திலும், 'புஷ்பா 2' படம் 1600 கோடிகளுடன் 3ம் இடத்திலும், 'ஆர்ஆர்ஆர்' படம் 1300 கோடிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளது. 1240 கோடிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ள 'துரந்தர்' படம், 'ஆர்ஆர்ஆர்' வசூலை முறியடித்து முன்னேற வாய்ப்புகள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !