உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் விஜய்யின் ரசிகை! - நடிகை குஷ்பு

நான் விஜய்யின் ரசிகை! - நடிகை குஷ்பு


நடிகர் விஜய் தான் புதிதாக தொடங்கியுள்ள 'த.வெ.க' அரசியல் கட்சி 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது 'ஜனநாயகன்' படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்துள்ளார்.

இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களின் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் நேற்று நடிகை மற்றும் பா.ஜ., நிர்வாகியான குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது அவர் கூறியதாவது, ஜனநாயகன் படம் தனது கடைசி படமாக விஜய் அறிவித்தது எனக்கு வருத்தம் தான். அவருடைய பெரிய ரசிகை நான். விஜய் எனக்கு தம்பி போன்றவர். அவரின் கடைசி படம் என்பது அதிர்ச்சியாக இருந்தது. அவரின் புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !