திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பிரசாரத்தின் போது, மேடையில், 'வட்ட வட்ட பாறையிலே' என்ற பாடலை பாடியிருந்தார். இது பலராலும் பகிரப்பட்டு வைரலானது. தற்போது இதனை திரைப்பட பாடலாக உருவாக்கியுள்ளனர். அரவிந்த் பாரதி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள 'பழவெட்டி சேதுராயன்' எனும் படத்திற்காக இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
நகைச்சுவை படமாக உருவாகியுள்ள 'பழவெட்டி சேதுராயன்' படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் அரவிந்த் பாரதி கூறுகையில், ''சீமான் பாடிய வட்ட வட்ட பாறையிலே பாடல் பிடித்து போனதால், அதனை படத்தில் பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டோம். அவரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனுமதி வழங்கினார். சீமான் பாடிய பல்லவியை எடுத்துக்கொண்டு மீத பாடலை நானே எழுதினேன். இதற்காக சீமானுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்றார்.
இந்த 'வட்ட வட்ட பாறையிலே' பாடல், எனும் யூடியூபில் வெளியாகி இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். வைக்கம் விஜயலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவரும் பாடியுள்ளனர்.