சிவாஜி பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன் ! - சிவகார்த்திகேயன்
ADDED : 8 days ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' படத்தின் தலைப்பை வைத்துள்ளதால் ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு விருது ஏற்பாட்டாளர்கள் சிவாஜி கணேசன், சிவகார்த்திகேயனுக்கு தீ பந்தத்தை கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வழங்கியுள்ளனர். அது குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் கூறியதாவது,இது மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம், அவர் அளவிற்கு நடிக்க யாராலயும் முடியாது, இனியும் அப்படி ஒரு நபர் வரவும் முடியாது. ஆனால், அவர் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கு, நிச்சயம் அவர் பெயரை காப்பாற்றுவேன். என்றார்.