உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ!

'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ!


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் 173வது படத்தில் சுந்தர்.சி வெளியேறிய பின்னர் ரஜினி 173வது படத்தை பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால்,யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென 'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ரஜினி 173வது படத்தை இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து என்ன செய்கிறார் என நாம் விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவலின் படி, ஒரு புதிய கதையுடன் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது சிவகார்த்திகேயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !