மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் தள்ளிப்போக காரணமாக இருந்த விஜய் தேவரகொண்டா!
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'தி ராஜா சாப்' எனும் படத்தில் நடித்துள்ளார் . இதில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளை படக்குழு கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கில் அளித்த பேட்டியில் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மாளவிகா மோகனன் கூறியதாவது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் எனது முதல் படமாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு காதல் கதையுடன் அமையவிருந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் விஜய் தேவரகொண்டா 'லைகர்' எனும் படத்தில் நடிப்பதற்காக ஆர்வமாக இருந்ததால் இந்த படத்தை விட்டு விலகினார். இதனால் தான் தனது தெலுங்கு அறிமுகம் தள்ளிப் போனது'' எனத் தெரிவித்துள்ளார்.