உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்?

'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்?


'கேஜிஎப்' படங்கள் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் யஷ். அவருடைய அடுத்த படமாக 'டாக்சிக்' படம் உருவாகி வருகிறது. மார்ச் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டர்கள் கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பமானது. முதலில் படத்தின் நாயகன் யஷ் கதாபாத்திரப் போஸ்டரை வெளியிட்டார்கள். யஷ் இருக்கும் நான்கு போஸ்டர்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தாலும் அவரது கதாபாத்திரப் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதற்கடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்தார்கள். முதலில் நடியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கியாரா அத்வானி, அடுத்தடுத்து எலிசெபெத் கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி, கங்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா, ரெபெக்கா கதாபாத்திரத்தில் தாரா சுடாரியா ஆகியோரது போஸ்டர்களைத் தொடர்ந்து இன்று மெல்லிஸா கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் போஸ்டரை வெளியிட்டார்கள்.

அனைத்துப் போஸ்டர்களின் டிசைனும், அதில் இடம் பெற்றுள்ள ஹீரோயின்களின் தோற்றமும் ஹாலிவுட் படங்களின் ஸ்டைலில் உள்ளது. அவற்றை ஒன்றாக வைத்துப் பார்த்தால் படம் ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நிலவரப்படி கியாரா அத்வானி போஸ்டருக்கான பார்வைகள்தான் அதிகமாக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் நயன்தாரா இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !