உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி

நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி


தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் நடிகர் அகில். இவர் நடிப்பில் கடந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 'ஏஜென்ட்' திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. அந்த படத்தை தயாரித்த அனில் சுங்கரா மற்றும் அதை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டத்தையும் கொடுத்தது. தற்போது தனது தந்தை நாகார்ஜுனா மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி இணைந்து தயாரித்து வரும் 'லெனின்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் அகில்.

இந்த படத்தை முடித்ததும் ஏஜென்ட் பட தயாரிப்பாளர் அனில் சுங்கராவுக்கு அடுத்த படத்தில் தான் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் அகில். மேலும் அந்த படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்குமாறும் அதில் வரும் லாபத்தை வைத்து ஏஜென்ட் பட நஷ்டத்தை தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் சரி செய்து கொள்ளுங்கள் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளாராம் அகில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !