உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன்

'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன்


விஜய் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' படம், அவர்கள் அறிவித்தபடி ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், ஜனநாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதற்காக படக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. படத்தை ரீ வைசிங் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அதற்கு ''நேரமில்லை. படத்தை 3 மொழிகளில் ரிலீஸ் செய்கிறோம் என படக்குழு சார்பில் வாதிட்டபோது, அந்த மத உணர்வு புகாரை தாக்கல் செய்ய வேண்டும். நாளை மதியம் விசாரணை, பட ரிலீசை ஏன், ஜனவரி 10ம் தேதிக்கு மாற்றக்கூடாது'' என்று கோர்ட் கேட்டுள்ளது.

படம் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகுமா என்பது நாளைய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். பட ரிலீசுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த விவகாரத்தால் ஜனநாயகன் படக்குழு மற்றும் விஜய் தரப்பு அதிர்ந்துள்ளது. இப்படிப்பட்ட விஷயத்தை யாரும் எதிர்பார்க்கவி்ல்லை. ஜனநாயகன் படத்துக்கு அரசியல் ரீதியாக பிரச்னை வரலாம். படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம் என அவர்கள் நினைந்திருந்தபோது சென்சார் போர்டு மூலமாக கடைசி நேரத்தில் இப்படிப்பட்ட பிரச்னை வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 19ம் தேதி ஜனநாயகன் படத்தை பார்த்த சென்சார்போர்டு குழுவினர் , சில விஷயங்களில் திருத்தம் சொல்லியிருக்கிறார்கள். அதை ஏற்று படத்தை சில நாட்களில் மாற்றிக்கொடுத்து இருக்கிறார்கள் படக்குழுவினர். ஆனால், சென்சார் போர்டு தரப்பில் இருந்து அடுத்தகட்ட பதில், நடவடிக்கை இல்லாததால் கோர்ட்டை நாடியிருக்கிறார்கள். ஆனால், சென்சார் போர்டு தரப்பில் ஜனநாயகன் படத்தில் மத ரீதியிலான உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் வந்து இருக்கிறது.

அடுத்த நடவடிக்கையாக ரிவைசிங் செல்ல வேண்டும். படத்தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பிரஷர் கொடுக்க முடியாது என்று சொல்ல, படக்குழு இதை எதிர்பார்க்கவில்லை. 3 மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியது இருப்பதால் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

நாளை மதியம் அடுத்த கட்ட விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, படத்தை ஏன் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்யக்கூடாது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை ஜனநாயகன் படம் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வரும் என ஜனநாயகன் குழு பதறுகிறது. அன்றைய தேதியில் ரெட் ஜெயண்ட் வெளியிடும் 'பராசக்தி' படம் வருகிறது. அதேநாளில் ஜனநாயகன் வந்தால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் வரும் அல்லது அதிக தியேட்டர் முதல்நாளில் கிடைக்காது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்படும்.

முதல் நாள், முதல் காட்சிக்கும் எதிர்பார்த்த ரசிகர் கூட்டம் வராது. அதனாலும் பாதிப்பு வரும். இது படத்தின் ஒட்டு மொத்த வசூலிலும் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு நாள் தாமதம் ஆனால், புக்கிங் உட்பட பல விஷயங்களில் பிரச்னை வரும். ஏற்கனவே புக்கான பணத்தை திருப்பி தரணும். ஒருவேளை ஜனவரி 10லும் ரிலீஸ் ஆகாவிட்டால் இன்னும் பெரிய பிரச்னைகள் வரும்.
அகண்டா 2

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா 2' படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் படத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு, படமே தோல்வி அடைந்தது. அந்த நிலை ஜனநாயகனுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நடத்த சென்னையில் இடம் கிடைக்காததால் மலேசியாவில் நடத்தினோம். அங்கேயும் அரசியல் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை வெற்றிகரமாக நடத்தினோம். அடுத்து 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன் என்று சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் வந்தன. பராசக்தி படம் முன்னமே ரிலீஸ் ஆவதாக ஷாக் கொடுத்து, ஜனநாயகன் குழுவை மிரட்டியது. சில நாட்களாக ஜனநாயகன் படத்தின் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. விஜய் தட்டி கேட்கமாட்டாரா என குரல்கள் வந்தன.

அடுத்து ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இப்போது படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என கேள்வி வர, விஜயின் கடைசி படம் இப்படி கல்லடிபடுகிறதே என்று கலங்கி இருக்கிறார்கள் விஜய் ரசிகர்களும், த வெ க தொண்டர்களும். அரசியலுக்கு வந்தால் இப்படிதான். பல தடைகள், பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். இதற்கே கண் கட்டினால் எப்படி, தேர்தல் வர, வர இன்னும் புதுசு புதுசா சிக்கல், பிரச்னை, பஞ்சாயத்து வரத்தான் செய்யும். அதையும் சமாளிக்கணும்னு விஜய் தரப்பில் ஒரு பிரிவினர் சொல்வது தனிக்கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Senthoora, Sydney
2026-01-07 09:37:38

நான் எட்கேனவே சொல்லியிருந்தேன் இந்த படத்துக்கு பல தடைகள் வரும், சொன்ன நாளுக்கு திரையிட முடியாது என்று. அகண்ட படம் போல தான் இந்த படமும் தொண்டை கிழிய கத்தி, கத்தி படம் தோலிவி ஆனது. இந்த படமும் தோல்விதான், விஜய்க்கு 220 கோடி சம்பளம் என்பது தனக்குத்தானே வைத்துக் கொண்ட சம்பளம், உண்மையில் அந்த சம்பளம் என்றால் 220 கோடிக்கும் வரிகட்டினாரா என்று அவரால காட்டமுடியுமா? ரோல்ஸ் ராய் காருக்கே வரிவிலக்கு கேட்டவர். வருமான வரி துறை இவர் இந்த படைத்து வரி கட்டினத்தை கன்பாம் பண்ணனும்.


Prem
2026-01-06 18:58:59

கண்டிப்பா ஆகும்...அகண்டா-2 இல்ல, அதுக்கும் மேல...