பராசக்தி பட சஸ்பென்ஸ் எது?
ADDED : 2 days ago
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசுக்கு 'பராசக்தி' 100வது படம். இந்த படத்தில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது அது சஸ்பென்சாக வைத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். அது எந்த ரகசியம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. தனது நூறாவது படம் என்பதால் மாமா ஏ ஆர் ரஹ்மானை பாட வைத்து இருக்கிறாரா அல்லது வேறு யாரையாவது பாட வைத்திருக்கிறாரா அல்லது படத்தில் அவரே சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறாரா என பல கேள்விகள் எழுகின்றன.
ஜனவரி 10ம் தேதி இதற்கு விடை கிடைக்கும். இப்பொழுது 'ஹாப்பி ராஜ்' உள்ளிட்ட நாலு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மலையாளத்திலும் இந்த ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகப் போகிறார். ஜிவி பிரகாஷ் முதலில் இசையமைத்த 'வெயில்' பெரிய ஹிட் ஆனது அதேபோல் பராசக்தியும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறாராம்.