பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம்
'ஜல்லிக்கட்டு' என்று படத்தின் தலைப்பு இருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கும் இந்த படத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. 1987ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை மணிவண்ணன் இயக்கினார். சிவாஜி, சத்யராஜ், ராதா, நம்பியார், ஜனகராஜ், மலேசிய வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
கிரைம் திரில்லர் பாணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவானது. படத்தில் நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தால் முதலில் தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. பின்னர் சில காட்சிகளையும், வசனங்களையும் நீக்கிய பிறகு சான்றிதழ் வழங்கப்பட்டது.
படம் 100 நாட்கள் ஓடியது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் 100வது நாள் விழாவில் கலந்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.
ஜல்லிக்கட்டு படத்தை தொடங்கி வைத்த எம்ஜிஆர். ஜல்லிக்கட்டு என்ற பெயர் கொண்ட படத்தின் வெற்றி விழாவிலும் கடைசியாக கலந்து கொண்டது. ஆச்சர்யமான ஒரு தற்செயல் நிகழ்வு.