உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா

கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா

பிரபல பாலிவுட் சீனியர் நடிகரான தர்மேந்திரா கடந்த நவம்பர் மாதம் தனது 89வது வயதில் வயோதிகம் காரணமாக காலமானார். அந்த வயதிலும் கூட அவர் கடைசியாக இக்கிஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் தர்மேந்திரா நடனமாடும் ஒரு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து நடன இயக்குனர் விஜய் கங்குலி கூறும்போது தர்மேந்திராவின் அர்ப்பணிப்பு, உழைப்பு பற்றி சிலாகித்து கூறியுள்ளார்.

“இந்த பாடல் காட்சி தர்மேந்திரா மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியில் பாடும் விதமாக படமாக்கப்பட்டது. அப்போது இரவு மணி இரண்டு இருக்கும். நடன கலைஞர்கள் அனைவரும் ஆடுவதற்கு தயாராக இருக்க தர்மேந்திரா என்னிடம் வந்து, இந்த நடனத்தில் நானும் இருக்கிறேனா என்று கேட்டார். அதற்கு அவரிடம் இது கொஞ்சம் கடினமான ஸ்டெப்ஸ்.. சில நிமிடங்கள் நின்று கொண்டே முன்னால் இருப்பவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தவாறு ஆட வேண்டும்.. அது உங்களுக்கு சிரமமாக இருக்கும் என்று கூறினேன். ஏன் என்னால் அது முடியாதா என்று கூறி அதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்த காட்சியில் நடனம் ஆடினார் தர்மேந்திரா.. இந்த வயதிலும் கூட நடிப்புக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று கூறியுள்ளார் நடன இயக்குனர் விஜய் கங்குலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !