உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல்

இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல்


நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி அரசியல் களத்தில் நுழைந்த பிறகு தற்போது அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தை தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். விஜய் அரசியலில் நுழைந்துள்ளதால் இந்த படம் ரிலீஸ் சமயத்தில் பலவிதமான சிக்கல்களை சந்திக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக ஜனவரி 10ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது படக்குழுவினர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது குறித்த தீர்ப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. இங்கு மட்டுமல்ல சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் இதே போல ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சிக்கல் எழுந்துள்ளது.

அங்கேயும் ஜனநாயகன் சில குறிப்பிட்ட காட்சிகளை கட் பண்ண சொல்லியும் சில காட்சிகளில் வசனங்களை மியூட் பண்ண சொல்லியும் சென்சார் போர்டு வலியுறுத்தி உள்ளதாம். அதனை சரி செய்து கொடுத்தால் தான் ஜனநாயகன் படம் அரேபிய நாடுகளில் சிக்கல் இன்றி வெளியாகும் என தெரிகிறது. அரபு நாடுகளில் தான் விஜய்யின் ஓவர்சீஸ் வசூல் பெரிய அளவில் இருக்கும் என்பதால் படக்குழுவினர் சென்சார் சிக்கலை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

BHARATH, TRICHY
2026-01-07 15:06:45

வினை அறுத்தவன் வினை அறுப்பான்