உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ்

தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ்

சமீபகாலமாகவே மலையாள நடிகர்கள் தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள நடிகர்களான சுராஜ் வெஞ்சாரமூடு, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல மலையாள காமெடி நடிகரான அஜு வர்கீஸும் தற்போது தமிழில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். கடந்த வருடம் இயக்குனர் ராமின் இயக்கத்தில் வெளியான பறந்து போ படத்தில் அஞ்சலியின் கணவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஜு வர்கீஸ். அதுதான் தமிழில் இவருக்கு முதல் படம்.

அதை தொடர்ந்து தற்போது பிரபுதேவா நடித்துள்ள மூன் வாக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜு வர்கீஸ். இவர் தொடர்ந்து முன்னணி காமெடி நடிகராக மலையாளத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், இடையில் கடந்த சில வருடங்களாக ஒரு சிறிய தேக்கம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா திரைப்படத்தில் மீண்டும் நிவின்பாலி, அஜு வர்கீஸ் காமெடி கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ் என இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம் அஜு வர்கீஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !