உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி

சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி

தெலுங்கில் சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த வால்டர் வீரய்யா படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபி கொல்லி. இதை தொடர்ந்து பாலகிருஷ்ணாவை வைத்து டாக்கு மகராஜ் என்கிற படத்தை இயக்கியவர் அடுத்ததாக மீண்டும் சிரஞ்சீவியை வைத்து அவரது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் தற்போது லேட்டஸ்ட் செய்தியாக மோகன்லால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவல்களும் அதற்கான அதிர்ச்சி பின்னணியும் வெளியாகி உள்ளது.

அதாவது மோகன்லால் முதன்முறையாக சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கிறார் என்பதால் அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க அழைக்கும்போது சம்பளம் எதுவும் பெரிதாக கேட்க மாட்டார் அல்லது ப்ரீயாகவே நடித்துக் கொடுப்பார் என்று தான் இயக்குனர் பாபி எதிர்பார்த்தாராம். ஆனால் மோகன்லால் தரப்பிலிருந்து 30 கோடி சம்பளமாக கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.. இது படத்தின் பட்ஜெட்டில் தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் என்பதால் தற்போது மோகன்லாலுக்கு பதிலாக வேறு யாரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என்கிற விவாதம் நடைபெற்று வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !