உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி

வருகிற 10ம் தேதி பரபரப்புடன் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்துள்ளார் அதர்வா. தம்பி என்றாலும் அவருக்கு எதிரான கேரக்டரில் நடித்துள்ளார். சமீபகாலமாக தோல்வியை சந்தித்து வரும் அதர்வாவிற்கு இந்தப் படம் ஒரு திருப்பம் தரும் என்று நம்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரனை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'பராசக்தி' கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ் தான். 'பராசக்தி' படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி.

ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப்படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும். ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் . ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்.

இயக்குனர் சுதாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை 'மேடம்' என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது.

வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக 'பராசக்தி' உருவாகியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !