'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரிக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'. மரியா இளஞ்செழியன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோபா பாய் ரசூல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் மூலம் அப்பாஸ் ரீஎண்ட்ரி ஆகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் மரியா இளஞ்செழியன் கூறும்போது படத்தை திட்டமிட்டப்படி முடித்துள்ளோம். இந்த படம் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரு ஆரோக்கியமான, நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். நம்பிக்கை, லேசான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டாடும் தொடர்புடைய தருணங்களை நினைவூட்டும் படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் இதுவரை நடித்திராக ஹேப்பி ராஜ் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.