உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ?

'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ?


விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. அதை வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை இன்றைக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இது குறித்து திரையுலகில் விசாரித்ததில் சில தகவல்களைச் சொல்கிறார்கள். படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். அடுத்து பழைய திரைப்படப் பாடல் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளார்களாம். அவற்றிற்கான 'என்ஓசி'யை தருவதில் தயாரிப்பு நிறுவனம் தாமதப்படுத்தியதுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.

ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உள்ள உண்மைத் தன்மை என்பதை தணிக்கை வாரியம் எப்போதுமே உன்னிப்பாகக் கவனிப்பார்களாம். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அதில் எந்தவிதமான தவறான வழிகாட்டுதல்களும் இருப்பதை அனுமதிக்க மாட்டார்களாம்.

இப்படியான சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை சமீப காலங்களில் சரியாக பின்பற்றுப்பட்டு வருவதால், அவற்றைச் சரி செய்யும் பொறுப்பு தயாரிப்பு நிறுவனத்தினடம்தான் இருக்கிறது என்கிறார்கள்.

இன்று மதியம் விசாரணைக்கு வந்த பின் இந்த வழக்கு பற்றிய மேல் விவரங்கள் தெரிய வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Selvakumar Krishna, Abu Dhabi
2026-01-07 14:07:19

பிஜேபி யுடன் இணக்கமாக போகவேண்டிய கட்டாயத்தை தணிக்கை ஆணையம் மூலம் உண்டாக்குகிறது இந்த கேடுகேட்ட அரசு