ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில்
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற பாடலில் நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீலீலா. அதையடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் படக்குழுவுடன் ஸ்ரீலீலாவும் கலந்து கொண்டு வருகிறார். அப்போது நடிகர் அஜித் குமாரை மலேசியாவில் சந்தித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அஜித் குமாரின் தீவிரமான ரசிகை என்பதோடு ரேஸிங்கில் எனக்கும் அதிகப்படியான ஆர்வம் உண்டு. அதனால்தான் அவரை நேரில் சந்தித்தேன் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அதோடு, குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 64வது படத்தில் ஸ்ரீலீலா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .