உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ்

சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்துக்கு பிறகு தான் தயாரித்த சுபம் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் சமந்தா. அதையடுத்து இப்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் புடவை கெட்டப்பில் தலைவிரி கோலத்துடன் ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் சமந்தா. அதோடு இந்த படத்தின் டீசர் வருகிற 9ம் தேதி, காலை 10 மணிக்கு வெளியாவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !