உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு

'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு

கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு செலவிற்காக அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜா திருப்பி கொடுக்க வேண்டும். ஞானவேல் ராஜாவுக்கு கடன் கொடுத்தவர் மறைவால் அவரது சொத்துக்களை நிர்வகிக்க சொதாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடனை திருப்பி செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சொத்தாட்சியர் ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்த ஞானவேல் ராஜா எந்த தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை 'வா வாத்தியார்' படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டதாக தெரிவித்து படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதோடு, 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு அதிகாரம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !