உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்'

பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்'

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வா வாத்தியார்'. இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஓரிரு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக கடந்தமாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாங்கியிருந்த முந்தைய படங்களின் கடன் பிரச்னையால் கோர்ட் உத்தரவால் படம் வெளியாகவில்லை. நேற்று கூட படத்திற்கான தடையை நீக்க கோர்ட் மறுத்தது.

இந்நிலையில் திடீரென இந்தப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன., 14ம் தேதி வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் படத்திற்கான கடன் தொகை பிரச்னையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அதன்பேரில் பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

விஜயின் ஜனநாயகன் படம் நேற்று வெளியாக இருந்து தணிக்கை பிரச்னையால் தள்ளிப்போனதால் இந்தப்படம் உட்பட 4 படங்கள் புதிதாக பொங்கல் வெளியீட்டில் இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !