உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ்

பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாவதாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக 'ஜனநாயகன்' படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள். 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை சிக்கல் இருந்து அவர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி இன்று ஜனவரி 10ம் தேதி வெளியிட்டுவிட்டார்கள்.

'ஜனநாயகன்' படம் அடுத்த வாரமும் வர முடியாத சூழல் தான் தெரிகிறது. அதனால், 'திரௌபதி 2' படத்தை பொங்கலுக்கு அறிவித்துள்ளார்கள். எந்தத் தேதியில் வெளியாகும் என்பது இன்று மாலை வெளியாகும் டிரைலருடன் அறிவிக்கப்படலாம். 'பராசக்தி' படத்திற்கு 'தீ பரவட்டும்' என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்ததை 'திரௌபதி தீ பரவட்டும்' என இக்குழு வாசகக் கடன் பெற்று பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இப்படம் தவிர, ஜீவா நடித்துளள 'தலைவர் தம்பி தலைமையில்' படமும் பொங்கலுக்கு ஜன., 15ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான தணிக்கை முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.

இந்தப் படம் தவிர சந்தானம் நடித்து கடந்த சில வருடங்களாக முடங்கியுள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தையும் வெளியிடும் முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை தவிர வேறு ஏதும் படங்கள் வருமா என்பது திங்கட்கிழமைக்குள் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !