உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்'

தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்'

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் மாருதி இயக்கத்தில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'தி ராஜா சாப்'. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா அளவில் பிரபலமானார் பிரபாஸ்.

ஆனால், அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்களில் மற்ற மொழிகளில் குறிப்பாக தமிழில் எந்தப் படமும் குறிப்பிடும் அளவு வரவேற்பைப் பெறவில்லை. “சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார், கல்கி 2898 ஏடி,' ஆகிய படங்களில் கடைசியாக வந்த 'கல்கி' படம் மட்டும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதில் கமல்ஹாசன் நடித்திருந்ததும் ஒரு காரணம்.

நேற்று வெளியான 'தி ராஜா சாப்' படத்திற்கு 'ஜனநாயகன்' வராத காரணத்தால் ஓரளவிற்குத் தியேட்டர்கள் கிடைத்தது. இன்று 'பராசக்தி' வெளிவந்துள்ளதால் தியேட்டர்கள் குறைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்களை 'தி ராஜா சாப்' படம் எந்த விதத்திலும் கவரவில்லை. அதனால், இங்கு இன்னும் இரண்டு நாட்களாவது தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் தான் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

பான் இந்தியா என்ற மாயையிலிருந்து பிரபாஸ் வெளியில் வர வேண்டும், அல்லது மற்ற மொழி ரசிகர்ளையும் மனதில் வைத்து கதை தேர்வு செய்ய வேண்டும். 'தி ராஜா சாப்' அந்தக் கால சிரஞ்சீவி படம் பாட்டு, பைட்டு, ஹீரோயின்களுடன் டான்ஸ் என உள்ளது என்பதுதான் விமர்சனமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

yrs
2026-01-10 17:35:30

wait and see