உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ?

சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ?

பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத் சமீப வருடங்களாக தென்னிந்திய மொழிகளில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கன்னடத்தில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் மூலம் தென்னிந்திய மொழியில் அடி எடுத்து வைத்த அவர், அந்த படத்தில் வலுவான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த வருடமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவர் விஜய்யின் தந்தையாக அதேசமயம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் படம் வெளியான பிறகு ஒருமுறை சென்னைக்கு வந்தபோது பத்திரிகையாளர்களிடம் லியோ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள். அந்த படத்தில் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தற்போது வருந்துகிறேன் என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்தப் படத்தில் அவரது காட்சிகளை குறைத்து விட்டார்கள் அல்லது அவரது கதாபாத்திரத்தை டம்மியாக்கி விட்டார்கள் என அவர் பீல் பண்ணி இருக்கலாம்.

இந்த நிலையில் தான் தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ராஜா சாப் படம் வெளியாகி உள்ளது. இதில் பிரபாஸின் தாத்தா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ளாஷ்பேக்கில் வரும் பத்து நிமிட காட்சிகளைத் தவிர அவர் பெரும்பாலும் பேயாக மற்றும் சாமியார் கெட்டப்பில் என வித விதமான கோரமான முகத்தோற்றங்களில் தான் காட்சி அளிக்கிறார். ராஜா சாப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லியோ படத்தில் கூட இவரை ரொம்பவே கெத்தாக காட்டி இருந்தார்கள். ராஜா சாப் படத்தில் இவர் மையக் கதாபாத்திரமாக இருந்தாலும் கூட ஒரு கேலி சித்திரம் போல தான் காட்டி இருக்கிறார்கள் என்று தங்களது கமெண்ட்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !