உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம்

அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம்

சமீபகாலமாகவே பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் அவர்களை அருகில் பார்ப்பதற்காகவும் தொட்டு கைகுலுக்கவும் ஆசைப்பட்டு ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து நெரிசலை ஏற்படுத்தி அசவுகரியத்தை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூரத்தில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தனது நண்பரும் தொழிலதிபருமான சுனில் ஷா என்பவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.

அவர் வந்த விஷயம் கேள்விப்பட்டு அவரைக் காண அங்கே திரளான ரசிகர்கள் கூடினார்கள். அவரைப் பார்ப்பதற்காக அந்த நிறுவனத்தின் கண்ணாடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறி செல்ல முயற்சித்ததில் ரசிகர்கள் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து நடிகர் அமிதாப்பச்சனை அங்கிருந்து பாதுகாவலர்கள் பத்திரமாக வெளியே அழைத்து வந்து வழி அனுப்பி வைத்தனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !