உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம்

ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம்

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என படத்தை வெளியிடும் முக்கியமான சங்கங்கள் தங்களது பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அரசிடம் கோரிக்கையை அளித்து இருந்தன. முதல்வர் பினராயி விஜயனும் அவர்களை அழைத்து அவற்றை சரி செய்வதாக சமாதானப்படுத்தினார். ஆனாலும் இந்த சங்கத்தினர் எதிர்பார்த்த எந்த விஷயங்களும் முன்னோக்கி நகராததால் தற்போது வரும் ஜனவரி 22ஆம் தேதி மொத்த திரையுலகமும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்கவும் திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்த இருக்கின்றனர்.

அதேசமயம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி மீண்டும் கேரள அரசு இவர்களை அழைத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வேலை அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஜனவரி 22 ஆம் தேதி வேலை நிறுத்தம் என்பது உறுதி தான் என திரை உலகை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !