கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன்
மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதேசமயம் அந்த வருடத்திலேயே சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமும் சேர்ந்து அவருக்கு தமிழில் நல்லதொரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழிலும் சரி, மலையாளத்திலும் சரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள, அதேசமயம் கவர்ச்சி காட்டுவதற்கு வாய்ப்பே இல்லாத கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் ரஜிஷா விஜயன்.
தற்போது மலையாளத்தில் இவர் மதிஸ்கமரணம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.. இந்த படத்தில் கோமளா தாமரை என்கிற பாடலின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலில் ரஜிஷா விஜயன் இதுவரை நடித்திராத விதமாக கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மேடை நடனம் ஒன்றை ஆடியுள்ளார். பார்க்கும் போதே இது உண்மையிலேயே ரஜிஷா விஜயன் தானா என்கிற ஆசிரியர்யத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளார்.