உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி

'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி


விஜய்யின் கடைசி படமாக உருவாகி உள்ள 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால், தணிக்கை சான்றிதழ் வர தாமதம் காரணமாக படத்தைத் தள்ளி வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் என படக்குழு அறிவிக்கவில்லை. இருந்தாலும் டிரைலர் வெளியான பின்பு அது உறுதியாகிவிட்டது. இதனிடையே, 'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குனரான அனில் ரவிப்புடி இயக்கியுள்ள தெலுங்குப் படமான 'மன சங்கர வரபிரசாத் காரு' படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் அனில் பேசுகையில்,

“விஜய் சாரோட கடைசி படம் எப்ப வந்தாலும் சாதனை படைக்கும். என்னை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், நான் ரீமேக் வேண்டாம், நேரடியாக தமிழில் படம் இயக்குகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரோட கடைசி படம், ரீமேக் படம் பண்ணா அது எப்படி இருக்குமோ என ஒரு பயம் எனக்கு இருந்தது.

அவருக்கு 'பகவந்த் கேசரி' படம் ரொம்ப பிடிச்சிருந்தது. படத்துல சில விஷயங்கள் அவரை ரொம்பவே கவர்ந்திருந்தது. எதுக்கு ரீமேக்னு ஒரு கேள்வி வந்தாலும், அந்தப் படம் மேல அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது,” எனக் கூறியுள்ளார்.

விஜய்யின் நம்பிக்கை எந்த அளவுக்கு காப்பாற்றப்படும் என்பது படம் வரும் போதுதான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !